முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல்

புதன், ஜனவரி 20,2016,

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள்குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை, சேப்பாக்கம், எழிலகம்கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக குடும்ப அட்டைகளை இழந்து, நகல் அட்டை கோரி மனுசெய்தவர்களுக்கு, உடனடியாக நகல் அட்டை வழங்க வேண்டுமென்ற முதல்வர் ஜெயலலிதாவிந் ஆணையின்படி, இதுவரை 6 ஆயிரத்து 516 நகல் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, 62 சிறப்பு முகாம்களில் பெறப்பட்டமனுக்களில் தகுதி அடிப்படையில் இன்று வரை, 13 ஆயிரத்து 409 நகல் அட்டைகள் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுத்து நகல் அட்டைகளை வழங்கவேண்டுமென அலுவலர்களை அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் விலையில்லா அரிசி பெறதகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், காவலர் அட்டைகள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கைகுடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, உணவு பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக மாதந்தோறும் 2-ம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், ஜனவரி 2016 வரையில், 4 இலட்சத்து 85 ஆயிரத்து 648 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 4 இலட்சத்து 67 ஆயிரத்து 108மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் கோரி மனு செய்யும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அட்டைகள்வழங்கப்பட வேண்டுமென்ற, இதுவரை மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 39 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று வரை, 4 இலட்சத்து 53 ஆயிரத்து 991 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகள்கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்படவேண்டுமென்றும், அச்சடித்து பெறப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை பெற்றுச்செல்லுமாறு மனுதாரர்களுக்குதகவல் தெரிவிக்குமாறும் அலுவலர்களை அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தினார்.

கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 28,044நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுள் 834 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் காமராஜ், உணவு துறை, வருவாய்த்துறை,குற்றப்புலனாய்வு காவல் துறை அலுவலர்கள் கூட்டு நடவடிக்கைகள் மூலம் கடத்தல் தடுப்பு பணியினைதொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.தமிழ்நாட்டில் 3 மாத பொது விநியோகத் திட்ட தேவைக்கு போதுமான புழுங்கல் மற்றும் பச்சரிசிகையிருப்பில் உள்ளதாகவும், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள், பாமாயில் முதலான மானிய விலைபொருட்கள் அந்தந்த மாதத்தின் தேவைக்கேற்ப கொள்முதல் செய்யப்பட்டு, அங்காடிகளுக்கு நகர்வுசெய்யப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.மாவட்ட வழங்கல் அலுவலர்கள் நியாய விலை அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு,அத்தியாவசியப் பொருட்கள், ஒதுக்கீட்டு ஆணையின்படி பெறப்பட்டுள்ளனவா என்றும், சீரான முறையில்விநியோகம் நடைபெறுவது, போதுமான, தரமான பொருட்கள் கையிருப்பில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்து வரவேண்டுமென்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைசெயலாளர்.சிவ்தாஸ்மீனாஉணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைஆணையாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகஇயக்குநர்.கா.பாலச்சந்திரன், உணவு பொருள் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர். கே.இராதாகிருஷ்ணன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.