முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி விவசாயிகளுக்கு நீர்த்தெளிப்பான் கருவிகள் M.P .கோபாலகிருஷ்ணன் வழங்கினர்: 5 ஆண்டுகளில் 1,233 விவசாயிகளுக்கு உதவி

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி விவசாயிகளுக்கு நீர்த்தெளிப்பான் கருவிகள் M.P .கோபாலகிருஷ்ணன் வழங்கினர்: 5 ஆண்டுகளில் 1,233 விவசாயிகளுக்கு உதவி

திங்கள் , பெப்ரவரி 22,2016,

விவசாயிகளுக்கு குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டும் வகையில், சொட்டு நீர் பாசனத்திற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காய்கறி விளைவிக்கும் ஆயிரத்து 233 விவசாயிகளுக்கு சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்த்தெளிப்பான் கருவிகளை அரசு வழங்கியுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மலை மாவட்டம் நீலகிரியில் தேயிலையே பிரதான பயிராக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 2-ம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டு வகையில் 100 சதவீத மானியத்துடன் நீர்த்தெளிப்பான் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் இறுதிக்கட்டமாக 389 விவசாயிகளுக்கு 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான நீர்த்தெளிப்பான் கருவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.P.சங்கர் ஆகியோர் வழங்கினர். இக்கருவிகளைப் பெற்றுக்கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில் காய்கறி விளைவிக்கும் ஆயிரத்து 233 விவசாயிகளுக்கு சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்த்தெளிப்பான் கருவிகளை அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.