முதல்வர் ஜெயலலிதா உத்தரப்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணை இன்று திறப்பு : 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்

முதல்வர் ஜெயலலிதா உத்தரப்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணை இன்று திறப்பு : 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்

சனி, ஜூன் 11,2016,

சென்னை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இது சம்பந்தமாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் சித்தார் II அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் சித்தார் II அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக 11–ந்தேதி (இன்று ) முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.