முதல்வர் ஜெயலலிதா என்னிடம் நன்றாகவே பேசினார் விரைவில் வீடு திரும்புவார் ; அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி

முதல்வர் ஜெயலலிதா என்னிடம் நன்றாகவே பேசினார் விரைவில் வீடு திரும்புவார் ; அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி

திங்கள் , அக்டோபர் 31,2016,

முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார் என அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார்.இதற்கு ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையைப் பெற்ற சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் பாலாஜி கூறியதாவது;

முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார்.முதல்வர் ஜெயலலிதாவுக்கு கைகள் வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கை வலி இருக்கிறது.அதனால் பேனாவை பிடித்து அவரால் கையெழுத்திட முடியவில்லை. ஆகையால் பெருவிரல் ரேகையை வைத்தார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமுடன் வீடு திரும்புவார். இவ்வாறு மருத்துவர் பாலாஜி கூறினார்.

மேலும் முதல்வர் உடல் நலம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.