முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 08,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி தருமபுரியில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா  சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 22ந் தேதி முதல் சிகிச்சைப் பெற்று வருகிறார்.அவர்  பூரண குணமடைய  வேண்டி தருமபுரி மாவட்டம் பாளையம்புதுரில் உள்ள வெங்கடரமணசுவாமி கோவில், நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும்  அதிமுக.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர். திருமுறைகள் ஓதியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை சேவித்தும் வேள்வி நடத்தியும் அதிமுக.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.