முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி 84 பேர் காசி யாத்திரை பயணம் மேற்கொண்டனர்

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி 84 பேர் காசி யாத்திரை பயணம்  மேற்கொண்டனர்

வெள்ளி , பெப்ரவரி 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா நீடூழி வாழவும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக வேண்டியும் சென்னையிலிருந்து 84 பேர் காசி யாத்திரை சென்றார்கள்.
காசி யாத்திரை சென்றவர்களுக்கு போர்வை, பழங்கள் வழங்கி அமைச்சர் பா.வளர்மதி வழி அனுப்பி வைத்தார்.தென் சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்று காசி யாத்திரை நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் 70 பேர், 75 பேர் என்று ஆண்களும், பெண்களும் சென்று வருகிறார்கள்.இந்த ஆண்டு இன்று 84 பேர் காசி புறப்பட்டனர்.

ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாளையொட்டி அவர் பூரண நலத்துடன் நீடூழி வாழ வேண்டியும், 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக வேண்டியும் காசி சென்று அங்கு காசி விசுவநாதர்–அன்னபூரணி விசாலாட்சிக்கு சிறப்பு வழிபாடு செய்ய இன்று பிராட்வே பிடாரி கோவில் தெருவில் இருந்து 84 பேரும் புறப்பட்டார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெட்ஷீட், டவல், பிஸ்கட், பழங்கள், தண்ணீர் பாட்டில் போன்ற பல்வேறு பொருட்களை அமைச்சர் பா.வளர்மதி வழங்கி இந்த யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், மாவட்ட பேரவை செயலாளர் முகமது இம்தியாஸ், நடிகர் ஜெயகோவிந்தன் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென் சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.முருகன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.