முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ மகளிர் பால்குட ஊர்வலம் : அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ மகளிர் பால்குட ஊர்வலம் : அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 22,2016,

முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 568 பெண்கள் பால் குடம் ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.  முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாளையொட்டி வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் , சென்னை  சூளை படாளம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலிருந்து 568 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். நேற்று காலை நடைபெற்ற  பால்குட  ஊர்வலத்தை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, துவக்கி வைத்தார்.

கவுன்சிலர் வேளாங்கண்ணி என்கிற கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம், சூளை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாத சாமி திருக்கோயிலில் முடிவடைந்தது. அங்கு அங்காளம்மனுக்கு சிறப்பு வழிபாடும் அபிஷேகமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன், பேரவை செயலாளர் ப்ரித்விராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணி சார்பில் 2,668 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

 மேட்டூர் நான்கு ரோடு காவிரி கரையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடக்கி வைத்தார். மேட்டூர் நகர்மன்றத் தலைவர் லலிதா சரவணன் தலைமையில் 2,668 பெண்கள் செண்டை மேளம் முழங்க பால்குடம் சுமந்து ஊர்வலம் சென்றனர்.