முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை படைத்துள்ளார்:”திமுக”வின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ பேச்சு

முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை படைத்துள்ளார்:”திமுக”வின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ பேச்சு

சனி, ஜனவரி 16,2016,

துக்ளக் பத்திரிகையின் 46 வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்

விழாவில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ.ராமசாமி பேசியது:

தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு காவிரி பிரச்சினை ஆகியவற்றில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை பெற்று தந்து உள்ளார்.

மேலும், தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை.

அதுவே பெரிய மாற்றம். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் சோ.