முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

வியாழன் , பெப்ரவரி 25,2016,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:–

அகவை 68–ஐ அடைந்துள்ள தமிழக முதலமைச்சர் ‘அம்மா’வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்–அமைச்சராக 3 முறை பொறுப்பு வகித்து சிறப்பு பெற்ற தாங்கள், வாழ்வில் மேலும் சிறப்பு பல பெற அன்னை பராசக்தி தங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.