முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம்: அம்பையில் 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்!

முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம்: அம்பையில் 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்!

வியாழன் , பெப்ரவரி 25,2016,

அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்கமோதிரம், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் ஆற்றுச்சாலை அரசடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு மாவட்டச் செயலரும், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன்

தங்கமோதிரம், வெள்ளிக் கொலுசு, புத்தாடைகள் வழங்கினார்.

இதையடுத்து பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  இதையடுத்து கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.