முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா

முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா

செவ்வாய், நவம்பர் 01,2016,

சென்னை : பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் முதல்வர் ஜெயலலிதா என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நடிகை நமிதா வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த நமீதா. கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வலிமையோடு வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்றார்.