முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

சனி, அக்டோபர் 01,2016,

அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்கள்?. 

நலமாக இருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை. 

முதல்வர் உடல் நலம் குறித்து பரவும் வதந்திக்கு யார் காரணம்?

தேவையில்லாதவர்கள் வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. நல்ல விஷயத்தை சொல்லலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்க அவர்கள் செய்கிற வேலை. மருத்துவமனை நிர்வாகமே தெளிவாக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக சொல்லி இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறார். ஜெயலலிதா உடல் நலம் குறித்து பரவும் தகவல்கள் முழுக்க, முழுக்க பொய். விரைவில் அவர், பூரண நலத்துடன், முழுபலத்துடன் வீட்டுக்கு வருவார்கள். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை சந்தித்தீர்களா? 

நாங்கள் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறோம். அவர்களைச் சும்மா, சும்மா சந்தித்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. நலமாக இருக்கிறார்கள். முதல்வருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்கள் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். சாதாரணமாக காய்ச்சல் வந்தாலே ஒரு வாரம் நமக்கே பாதிப்பு இருக்கும். 

காய்ச்சல் தவிர வேறு எதுவும் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? 

சமூக வலைத்தளத்தில் சிகிச்சை தொடர்பாக ஆயிரம் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.அம்மா பூரண ஆரோக்கியத்துடன் உள்ளார். நன்றாக பேசுகிறார். அலுவல் பணிகளை கவனித்து கொண்டி ருக்கிறார். பொதுத்துறை ஊழியர் களுக்கு போனஸ் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் பேச வேண்டிய உரையை தயாரித்து வழங்கி உள்ளார். கட்சி பணிகளை கவனிக்கிறார்

ஆரோக்கியமாக சகஜமாக இருக்கும் அம்மா உடல் நிலை பற்றி சமூக வலை தளங்கள் தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது தேவையற்ற ஒன்றாகும்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமே அம்மா நன்றாக இருப்பதாக அறிவித்த பிறகும் மக்களை குழப்பும் வகையில் சிலர் வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு சி.ஆர். சரசுவதி கூறினார்.