முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி சார்பில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி சார்பில் சிறப்பு வழிபாடு

திங்கள் , செப்டம்பர் 26,2016,

சென்னை : முதல்வர்  ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அதிமுக இலக்கிய அணி சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சென்னை கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தினார்.

முதல்வர்  ஜெயலலிதா பூரணகுணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டி சென்னை அசோக்நகர் அருகே அருள்மிகு மல்லிக்கேஸ்வர் திருக்கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி இந்த சிறப்பு பூஜையை நடத்தினார், 108 தேங்காய்கள் உடைத்தும் . 216 தேங்காய்களில் நெய் விளக்கு ஏற்றி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சிவராஜ், மற்றும் அதிமுக பிரமுகர்கள் மதுசூதனன், ராணி அண்ணா நகர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.