முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் , நவம்பர் 21,2016,

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் குழு, லண்டன்–சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் அளித்த சிகிச்சையின் பயனாக முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

தினமும் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக செயற்கை சுவாசம் இல்லாமல் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த 19–ந்தேதி மாலை அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து வருவதால் ஒருசில நாட்களில் வீடு திரும்ப இருக்கிறார்.

இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். திருஷ்டி பூசணிக்காய்களும், தேங்காய்களும் உடைக்கப்பட்டன.

ஆயிரம்விளக்கு தொகுதி அ.தி.மு.க. சார்பில் இன்று மருத்துவமனைக்கு வந்த பார்வையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் மகளிரணியினர் பைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். மருத்துவமனைக்கு வந்த பார்வையாளர்களுக்கு பொங்கல், கிச்சடி, வடை, கேசரி போன்றவை வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அடைக்கலம் பார்வையற்றோர் பொதுநல அறக்கட்டளை சார்பில் நிர்வாகி சின்னத்தம்பி என்பவருடன் 30–க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் இன்று அப்பல்லோ மருத்துவமனை முன்பு முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.