முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் : பொன்னையன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் : பொன்னையன் தகவல்

ஞாயிறு, டிசம்பர் 04,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டதாகவும்,அதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நி லையில், முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர்  பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுவிட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான நோய்கள் குணம் அடைந்து விட்டனர். தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடுகிறது. 

பணிக்கு திரும்புவதற்காக முதல்வர் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அரசு தொடர்பான உத்தரவுகளை முதல்வர் வழங்கிவருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.