முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

செவ்வாய், டிசம்பர் 06,2016,

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள்விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி இன்று தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி புதுச்சேரி மற்றும் பிகார் மாநில அரசுகள் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளன.