முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 22 நவம்பர் 2015

 

                     அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக  இ. மதுசூதனன் (அவைத் தலைவர்),  சி. பொன்னையன் (கழக அமைப்புச் செயலாளர்), ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்),  நத்தம் இரா. விசுவநாதன் (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), ஆர். வைத்திலிங்கம் (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), எடப்பாடி கே. பழனிசாமி (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), பி.  பழனியப்பன் (கழக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்), டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன் (கழக அமைப்புச் செயலாளர்), பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (கழக அமைப்புச் செயலாளர்), டாக்டர் மு. தம்பிதுரை (கழக கொள்கை பரப்புச் செயலாளர்), செ. செம்மலை (கழக அமைப்புச் செயலாளர்).

 துரை கோவிந்தராஜன் (கழக விவசாயப் பிரிவுத் தலைவர்), பா. வளர்மதி (கழக இலக்கிய அணிச் செயலாளர்), தாடி ம. ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்),  ஆர். சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்), ஏ. ஜஸ்டின் செல்வராஜ் (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்), ஏ. அன்வர்ராஜா (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்), 20. ஆர்.பி. உதயகுமார் (கழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்), எஸ். கோகுல இந்திரா (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்).

ஏ.கே. செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலைனக் குழு உறுப்பினர்), டாக்டர் பி. வேணுகோபால் (கழக மருத்துவ அணிச் செயலாளர் மற்றும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்), வி.எஸ். சேதுராமன் (கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்).  ஏ. நவநீதகிருஷ்ணன் (கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மற்றும் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் ).

எஸ். ராஜூ அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர்), கே.கே. கலைமணி (கழக மீனவர் பிரிவுச் செயலாளர்), உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்), ஏ. பாப்பாசுந்தரம் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ். ஜெனிபர் சந்திரன் (கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்).

ஆர். கமலகண்ணன் (கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), நாஞ்சில் சம்பத் (கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), எல். சசிகலா புஷ்பா (கழக மகளிர் அணிச் செயலாளர்), ப. குமார் (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்), எஸ்.ஆர். விஜயகுமார் (கழக மாணவர் அணிச் செயலாளர்), அஸ்பயர் கே. சுவாமிநாதன் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்), வி. அலெக்சாண்டர் (கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), பி.கே. வைரமுத்து (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்), டாக்டர் மு. கோபால் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ். வளர்மதி (கழக அமைப்புச் செயலாளர்), ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (கழக அமைப்புச் செயலாளர்) ஆகியோரை நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.