முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி ஜல்லிக்கட்டு நடைபெற அவசரசட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி ஜல்லிக்கட்டு நடைபெற அவசரசட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்

வெள்ளி, ஜனவரி 01,2016,

சென்னை : ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற, மத்திய அரசுஅவசரச் சட்டம் கொண்டுவர, முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுஆவன செய்ய வேண்டும் என்று அதிமுக பொது்க்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி. திடலில் நடைபெற்றது. இந்த கூட்ட்த்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்வைத்த தீர்மானத்தின் விவரம்;

`ஜல்லிக்கட்டு’ என்ற வீர விளையாட்டு சங்க காலம் முதல் கடந்த பலநூறு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின்சாகச விளையாட்டு; இது தமிழர்களின் வீர மரபோடு இரண்டறக் கலந்தஒன்று. பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத்தொடர்ந்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் `ஜல்லிக்கட்டு’,தமிழகத்தில் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர, மிருக வதைஅல்ல என்ற பண்பாட்டு உண்மையை ஏற்றுக்கொண்டு உடடினயாகஓர் அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், எதிர்வரும் பொங்கல் திருநாள்கொண்டாட்டங்களின் போது `ஜல்லிக்கட்டு’ நடத்தப்பட உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசைஇந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கொண்டு வந்த தீர்மானம், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.