முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் ; பண்ருட்டி ராமச்சந்திரன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் ; பண்ருட்டி ராமச்சந்திரன்

வியாழன் , நவம்பர் 03,2016,

சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து சிறந்த முறையிலே ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.மருத்துவமனைக்கு வெளியே அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து பூரண நலத்துடன் வீட்டுக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல முறையிலே முன்னேற்றம் அடைந்து வருகிறார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாட்டு மக்களும் நம்பிக்கையோடும், நல்ல எண்ணத்தோடும் அவர்களும் இந்த செய்தியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் இதுவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக செய்த பிரார்த்தனைகள் எல்லாம் இன்றும் பலனளித்து வருகிறது என்பதை நாங்கள் கண்கூடாக கண்டோம்.

மீண்டும் தமிழ்நாடு அரசை பொறுப்பேற்று சிறந்த முறையிலே ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.