முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன் தகவல்

வெள்ளி, நவம்பர் 18,2016, 

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வியாழக்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். அவர்கள் கூறிய பதில் திருப்தி அளிக்கிறது. தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் நலமுடன் வெளியேறி தமிழகத்துக்கு பல நன்மைகளை நிச்சயம் செய்வார்”, என்றார்.