முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

திங்கள், பிப்ரவரி 06 , 2017,

சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை நேற்று  ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.

இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.அதில், ”தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வராக இருந்த காலத்தில் நல் ஆதரவை வழங்கியதற்காக நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.”முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் முழுமையான ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி’ என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.