முதல்வர் பழனிச்சாமிக்கும் எனக்கும் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை : டிடிவி தினகரன் பேட்டி

முதல்வர் பழனிச்சாமிக்கும் எனக்கும் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை : டிடிவி தினகரன் பேட்டி

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்றும், 2 மாத காலத்திற்குப் பிறகு அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  டி.டி.வி.தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

எனக்கு யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. “அதிமுகவின் தலைவர் சசிகலாதான். அவரால் இப்போது செயல்படமுடியாத நிலை உள்ளது. எனவே சில நடக்க கூடாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. விரைவில் இதெல்லாம் சரியாகிவிடும்” என்றார். இன்னும் 60 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என ஜூன் 5ம் தேதி நான் கூறினேன். அதையேதான் இப்போதும் சொல்கிறேன். 60 நாட்கள் முடிவடையட்டும், எனது செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாரு டிடிவி தினகரன் தெரிவித்தார்.