முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

செவ்வாய், டிசம்பர் 06,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்ததும்,குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் :

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது.

பிரதமர் மோடி:

ஜெயலலிதா மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா:

ஏழை, எளியோரின் மேம்பாட்டுக்கான அரசியல் தலைவராக வாழ்ந்தவர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் :

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்தவர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

சிறந்த தலைவர் ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி:

சிறந்த தலைவரை இழந்து விட்டோம்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்:

ஏழைகளின் தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர்.

பாஜக தலைவர் அமித் ஷா:

ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

இந்திய அரசியலில் மேதையாக திகழ்ந்தவரை இழந்துவிட்டோம்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்:

மிகச்சிறந்த பெண் தலைவரை இழந்துவிட்டோம்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி:

இரும்புப் பெண்மணி தற்போது இல்லை.

மேலும், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, பொன். ராதா கிருஷ்ணன், சுரேஷ் பிரபு, நிர்மலா சீத்தரா மன், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உட்பட மாநில முதல்வர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் உட்பட தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், மாநில பாஜக தலைவர் தமிழிசை, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொது செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், சமக கட்சி தலைவர் சரத் குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.