முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா ; சென்னையில் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள்- அ.தி.மு.க.வினர் மரியாதை

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா ; சென்னையில் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள்- அ.தி.மு.க.வினர் மரியாதை

திங்கள் , அக்டோபர் 31,2016,

சென்னை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109 வது ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள், அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், சிலை அருகே அவரது திருவுருவப்படம் ஒன்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் தங்கமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச்செயலாளர் கமலக்கண்ணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன், சரோஜா, எம்.சி. சம்பத், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, க.பாண்டியராஜன், ராஜேந்திரபாலாஜி, பா.பென்ஜமின், நீலோபர் கபீல், தென் சென்னை தெற்கு மாவட்ட விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.