மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

ஞாயிறு, பிப்ரவரி 26, 2017,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் நாகரிகம் இல்லாமல், ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியாது. ஜெயலலிதா மீது காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்துள்ள துரதிர்ஷ்டவசமானது. இதற்கு என் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, ஸ்டாலின் மக்களுக்கு பயனுள்ள பணியை செய்ய வேண்டும்.

அப்படி ஜெயலலிதாவின் படத்தை அகற்ற முயன்றால், தமிழகத்தில் அவரின் படம் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகும்’ என கூறியுள்ளார்.