மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளர் செம்மலையை வெற்றி பெற செய்ய வேண்டும் : அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளர் செம்மலையை வெற்றி பெற செய்ய வேண்டும் : அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஞாயிறு, ஏப்ரல் 17,2016,

மேட்டூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார்.

மேட்டூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மேட்டூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ. அர்ச்சுனன், தொகுதி செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக மேட்டூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தனி குடிநீர் திட்டம் உள்பட பல நல்ல திட்டங்களை அளித்து உள்ளார். இவற்றை நமது கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று எடுத்து சொல்லி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து நமது வேட்பாளர் செம்மலையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்‘ என்றார்.
கூட்டத்த்தில் நகர் மன்ற தலைவர் லலிதா சரவணன், நகர்மன்ற துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், எமரால்டு வெங்கடாஜலம், சதாசிவம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.