மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா:இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

திங்கள் , பெப்ரவரி 08,2016,

சென்னை: சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்து மக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை தரும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மன உளைச்சலுக்கு ஆளாவதோடு வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றவும் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருவதோடு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை கடந்த 5 ஆண்டுகளில் 385லிருந்து 755ஆக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி, 66 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசரகால ஊர்திகள், 78 மலையோரங்கள் மற்றும் மணல் பாங்கான பகுதிகளில் இயங்கக்கூடிய சிறிய ரக அவசரகால ஊர்திகள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை 108 அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று துவக்கி வைத்துள்ளார்.