யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று 32.63 % பேரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 18.88 % திமுக தலைவர் கருணாநிதிக்கு 15.21 % பேரும் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:

ஜெயலலிதா 32.63%; ஸ்டாலின் – 18.88%; கருணாநிதி – 15.21%; விஜயகாந்த் 6.54%; அன்புமணி- 4.30%; வைகோ- 4.04% சிதம்பரம் – 1.28 %.