அம்மா உப்பு மாதம் 2,500 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது: இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது

அம்மா உப்பு மாதம் 2,500 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது: இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது

திங்கள் , பெப்ரவரி 01,2016,

ராமநாதபுரத்தில், சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மா உப்பு உற்பத்தி நிலையத்தில், மாதம் 2 ஆயிரத்து 500 டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உருவான அம்மா உப்பு திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் உப்பைவிட, குறைந்த விலையில் அம்மா உப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான உப்பு உற்பத்தி நிலையத்தில், அம்மா உப்பு உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு அயோடின் கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட உப்பு, செறிவூட்டப்பட்ட அயோடின் மற்றும் இரும்புச்சத்து கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவை தயாரிக்கப்படுகிறது. மாதம் 2 ஆயிரத்து 500 டன் வரை தயாரிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.