ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

சனி, மார்ச் 12,2016,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் அதிக கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களின் நலன் கருதி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், பாம்பன், தங்கச்சி மடம், வேதாளை, டி.மாரியூர் ஆகிய இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீன் இறங்குதளங்களால், புயல் வெள்ள காலங்களில், மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக நிறுத்துவதற்கும், கடலில் பிடித்து வரும் மீன்களை தாமதமின்றி கரைக்கு எடுத்துவந்து உடனடியாக விற்பனைக்கு கொண்டு செல்லவும் வசதி ஏற்படும்.