ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க வழங்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் முதல்வர்   ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க வழங்கப்பட்டன

புதன்கிழமை , டிசம்பர் 30, 2015,

தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன. 23 விவசாயிகளுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் டிராக்டர்களும், 5 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைப்பு கருவிகளும், 2 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிர் அறுக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சருக்கு விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.