ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள்: அமைச்சர் வேலுமணி தகவல்

ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள்: அமைச்சர் வேலுமணி தகவல்

வெள்ளி, ஜனவரி 22,2016,

தமிழகத்தில், ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட மன்றத்தில், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 216 நீதிமன்றங்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டதாகவும், அதில், ரூ. 134 கோடி செல்வில், 170 நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 46 நீதிமன்றங்கள் 21 கோடி செலவில் அமைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துவருவதாக தெரிவித்தார்.