ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017,

சென்னை : ரூ.1580 கோடி மதிப்பீட்டிலான கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு :- பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் சொந்தக் குடியிருப்பு வசதி இல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய-மாநில அரசு நிதியுதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
2016-17-ஆம் ஆண்டில் 329 பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த 50 ஆயிரத்து 170 பயனாளிகளுக்கு ஒரு வீட்டுக்கு ரூ.3.15 லட்சம் வீதம், மொத்தம் ரூ.1,580.36 கோடி மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் 5 பயனாளிகளுக்கு ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.