ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

சனி, டிசம்பர் 12,2015,

தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக ரூ.25 கோடி அளித்ததற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க தமிழக அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது” எனஅந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.