ரூ.807 கோடியில் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ரூ.807 கோடியில் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

ரூ.807 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 807 கோடியே 26 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய38 ஆயிரத்து 441 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பசுமை வீடுகள் திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார். வங்கிகளுக்கு விருது

2012-2013 மற்றும் 2013-2014ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் அதிக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கி சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம்பெற்றமைக்கான விருதினை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும்முதன்மை செயல் அலுவலர் மகேஷ் குமார் ஜெயினுக்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி 2012-2013ஆம் ஆண்டு இரண்டாம்இடமும், 2013-2014ஆம் ஆண்டு மூன்றாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின்தலைவர். ஆர். இளங்கோவனுக்கு பல்லவன் கிராம வங்கி 2012-2013ஆம் ஆண்டு மூன்றாவது இடமும்,2013-2014ஆம் ஆண்டு இரண்டாவது இடமும் பெற்றமைக்காக, அவ்வங்கியின் தலைவர். எஸ். சுரேஷ் குமா்ருக்கும் முதலமைச்சர்ஜெயலலிதாவிருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்,நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.எஸ்.பி. வேலுமணி,தலைமைச் செயலாளர், .கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசெயலாளர் .ககன்தீப் சிங் பேடி,., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர்.கா. பாஸ்கரன்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர் . அமுதவல்லி., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.