ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ஞாயிறு, நவம்பர் 27,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரொக்கமாக பயிர்க்கடன் வழங்கும் விழா, பல்வேறு இடங்களில் நடைபெற்றது. பயிர்க்கடன் பெற்றுக்கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அ.வெள்ளோடு, அடியனூத்து, கூவனூத்து, பாகாநத்தம், பட்டிவீரன்பட்டி ஆகிய கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 43 விவசாயிகளுக்கு 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயிர்க்கடனை அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

தருமபுரியில், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 28 பேருக்கு, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்களை அமைச்சர் கே.பி அன்பழகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 130 விவசாயிகளுக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடனை அமைச்சர்  ஓ.எஸ். மணியன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையில், பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இனுங்கூர், நங்கவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 30 பயனாளிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடனை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், 140 கோடி ரூபாய் ரொக்கமாக கடன் வழங்கும் திட்டம் தொடங்கியது. உதகை அருகே துனேரி கிராமத்தில், முதற்கட்டமாக 32 விவசாயிகளுக்கு 23 லட்சம் ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, குமாரபுரம் தோப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 27 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.பயிர்க்கடன்களை பெற்றுக்கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.