வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் – தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் – தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தும் உயிரிழந்த 7 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 28 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 10-ம் தேதியன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திரு. சூடேசன் என்பவரின் மகள் சுகன்யா;

நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த திரு. சி.கே.வி. நாயர், சிறுபாளையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தங்கராசு என்பவரின் மகன் முருகேசன், சிதம்பரம் வட்டம், நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. குமாரசாமி என்பவரின் மகன் நடேசன்;

திரு. கலியபெருமாள் என்பவரின் மனைவி கனகம், விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த திரு. காசிநாதன் என்பவரின் மகன் கதிரவன் ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சி.கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னசாமி என்பவரின் மகன் தங்கராசு, மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.