வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை – அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிலவரம் குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் மற்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மீன்வளத் துறை அமைச்சர் திரு.கே.ஏ. ஜெயபால், வருவாய்த் துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு.கே. சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் திரு. அதுல்ய மிஸ்ரா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் என்.எஸ். பழனியப்பன், வருவாய்த் துறைச் செயலாளர் திரு.ஆர் வெங்கடேசன், வேளாண்மைத் துறைச் செயலாளர் திரு. ராஜேஷ் லக்கானி, கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.விக்ரம் கபூர், மீன்வளத் துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: Latest News