வருகிற சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார்: ராதாரவி

வருகிற சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார்: ராதாரவி

ஞாயிறு, மார்ச் 06,2016,

வருகிற சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அருகே சினிமா படப்பிடிப்பில் இருந்த நடிகர் ராதாரவி நேற்று பத்த்ரிகையளர்களை சந்தித்தார். எங்கு சென்றாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.
மேலும் கூறிய அவர், வருகிற சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்றார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆசை இல்லை, அதற்காக பணமும் கட்டவில்லை என்றார். ஆனால் அதிமுக-வுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி, கடந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வெற்றிக்கு அதிமுக தான் காரணம் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளம் அதிமுக-வுக்கு எதிராக அமையாது என நடிகர் ராதாரவி கூறினார்.