வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்;நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்;நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு

சனி, டிசம்பர் 26,

தமிழகத்தில், வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் ஜெயலலிதா, நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, மகத்தான வெற்றியை பெறுவது என நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளின் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மோகனூர், அணியாபுரம், வாழவந்தி உள்ளிட்ட 24 ஊராட்சிகளைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள், பல்வேறு இடங்களில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் திரு. P. தங்கமணி மற்றும் பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின், மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, தேர்தல் பணியாற்றுவது என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றிபெறச் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதியில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில், முதலமைச்சர்  ஜெயலலிதா, ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதை கருத்தில் கொண்டு, 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தினருடன், அமைச்சர் திரு. ஆர். காமராஜ் முன்னிலையில், அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.