வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற பாடுபட வேண்டும் : பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற பாடுபட வேண்டும் : பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு

21 November 2015

பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் இன்று கழக செயல் வீரர்கள்-வீராங்கணைகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆற்றியுள்ள திட்டங்களை வீடுகள்தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனிப் பெற பாடுபட வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின்போது கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிந்ததோடு, இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆர்.பி.மருதராஜா, திரு.மா.சந்திரகாசி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி, அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.