வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

திங்கள் , மார்ச் 07,2016,

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பஷீர் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைந்துள்ளது என்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், மக்களின் முடிவு அ.இ.அ.தி.மு.க.வை நோக்கித்தான் உள்ளது என்றும் திரு. பஷீர் அகமது உறுதிபடத் தெரிவித்தார்.