விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விண்கல் விழுந்ததில் உயிரிழந்த ஓட்டுனர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , பெப்ரவரி 08,2016,

சென்னை : நாட்றாம் பள்ளியில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரியில் விண்கல் விழுந்ததில் உயிரிழந்த பேருந்து ஒட்டுநர் காமராஜ் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மூவரின் சிகிச்சைக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை –

வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று விண்கல் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டதில், அந்தக் கல்லூரியின் பேருந்து ஓட்டுநர். காமராஜ் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காமராஜின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில், அந்தக் கல்லூரியில் தோட்ட பராமரிப்பாளர்களாக பணியாற்றி வரும் சசிகுமார், முரளி மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த . காமராஜின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்த. சசிகுமார், முரளி மற்றும் மாணவர்  சந்தோஷ் ஆகியோருக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இ்வ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.