விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . தங்கவேல் என்பவரின் மகன் பாபு 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த. பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த . பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.