விரைந்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, காது கேளாத,வாய் பேச இயலாத சிறுமலர் பள்ளி நிர்வாகம் பாராட்டு !

விரைந்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, காது கேளாத,வாய் பேச இயலாத சிறுமலர் பள்ளி நிர்வாகம் பாராட்டு !

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

சென்னை,  முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கு லிட்டில் பிளவர் கான்வென்ட் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு;

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சிறுமலர் பள்ளியில் மழை நீர் புகுந்தது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட காது கேளாத, மற்றும் வாய் பேச இயலாத மற்றும் பார்வையற்ற மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இச்செய்தியறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அங்கேயே முகாமிட்டு போதிய உதவிகள் செய்திட உத்தரவிட்டார். அதனால் அவர்கள் பள்ளியிலே முகாமிட்டு அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தனர். மேலும், தேங்கியுள்ள மழை நீரை முழு வீச்சில் வெளியேற்றவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. தக்க சமயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.