விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

ஆகஸ்ட் 16 , 2017 ,புதன்கிழமை,

சென்னை : நல்ல நாள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ”அமைச்சரிடம் அரசின் மீது கமல் விமர்சனம் வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அரசில் குழப்பத்தை விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என பல்வேறு முயற்சிகளில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் கமலும் ஒருவர்.

அதிமுக அணிகள் இணைப்புக்கான முகூர்த்த தேதி இன்னும் குறிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை சாதகமாக, மக்கள் நலன்கருதி, ஜெயலலிதா ஆசியுடன் நடந்து வருகிறது. வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.