விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

62-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் திரு.ப.மோகன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த அமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், டாக்டர் காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 380 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.த.செல்லபாண்டியன் வழங்கினார்.