விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை அமைச்சர் ப. மோகன் வழங்கினார்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை அமைச்சர் ப. மோகன் வழங்கினார்

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016,

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு 6 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில், பால் வளத்துறை சார்பில், சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு 6 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.