விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரம் பேருக்கு விலையில்லா வேட்டி,சேலைகள்:அமைச்சர் ப.மோகன் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரம் பேருக்கு விலையில்லா வேட்டி,சேலைகள்:அமைச்சர் ப.மோகன் வழங்கினார்

செவ்வாய், ஜனவரி 05,2016,

விழுப்புரம் மாவட்டத்தில் 13,887 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி,சேலைகளை சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டங்களில் கலெக்டர் எம்.லட்சுமி தலைமையில் அமைச்சர் ப.மோகன் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம் வடக்கனந்தல் மற்றும் சங்கராபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களையும், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ– மாணவிகள் பொதுத் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற கற்றல் கையேடுகளையும் அவர் வழங்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை ஏழை எளிய மக்கள் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8,40,776 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக நேற்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நகராட்சியில் 2,332 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அம்மாபேட்டை கிராமத்தில் 900 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வடக்கனந்தல் கிராமத்தில் 3,026 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கச்சிராயப்பாளையம் கிராமத்தில் 2,650 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் 3,637 குடும்ப அட்டைதாரர்களுக்கும், சின்னசேலத்தில் 1,342 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 13,887 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் ப.மோகன் வழங்கினார்.
மேலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த வாரத்திற்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்க வேண்டுமென வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 3,10,000 மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 27,000 மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் எளிதில் வெற்றிபெற கற்றல் கையேடுகளும் வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று வடக்கனந்தல் மற்றும் சங்கராபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களையும், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கற்றல் கையேடுகளையும் அமைச்சர் ப.மோகன் வழங்கினார்.
விலையில்லா மடிக்கணினி
மேலும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் சின்னசேலம் வட்டம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 90 மாணவ மாணவிகளுக்கு ரூ.15,11,100 மதிப்பீட்டிலும், தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 52 மாணவ மாணவிகளுக்கு ரூ.8,73,080 மதிப்பீட்டிலும், கூகையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 108 மாணவ மாணவியர்களுக்கு ரூ.18,13,320- மதிப்பீட்டிலும், நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 246 மாணவ மாணவிகளுக்கு ரூ.41,30,340 மதிப்பீட்டிலும் என மொத்தம் 496 மாணவ மாணவியர்களுக்கு ரூ.83,27,840 – மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகளையும், கூட்டுறவுத்துறையின் கீழ் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாட்கோ மூலம் ரூ.6,00,000 மதிப்பிலான கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு ரூ.2,15,000 – மதிப்பிலான கடனு தவிகளையும் அமைச்சர் ப.மோகன் வழங்கினார்.
முன்னதாக, பேரூராட்சித்துறையின் மூலம் சின்னசேலம் வட்டம் நத்தக்காடு கிராமத்தில் நபார்டு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.35,00,000 – மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வெங்கட்ராயன்காடு முதல் பழைய பொட்டியம் சாலை இணைப்பு தார் சாலையினையும், வடக்கனந்தல் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3,00,000 -மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையினையும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.35,00,000 மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்பு முதல் பெரியநாயகி அம்மன் கோயில் வரை அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை யினையும், அம்மாபேட்டை கிராமத்தில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் ரூ.10,80,000 – மதிப்பீட் டில் அம்மாபேட்டை பிள்ளையார்கோவில் தெரு குளத்திற்கு கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரி னையும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அம்மாபேட்டை கிராமத்தில் பொதுநிதி வேலைகள் திட்டத்தின்கீழ் ரூ.24,00,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மாபேட்டை கிழக்கு தெரு, கீழ்புறம் சந்து பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகாலினையும், சங்கராபுரம் வட்டம் காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.3,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையினையும் அமைச்சர் ப.மோகன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல்பாபு, முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் தனமணி, கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கதிர்தண்டபாணி, கோட்டாட்சியர் மாலதி, ஒன்றியக்குழு தலைவர்கள் எஸ்.எஸ்.அரசு, ஏ.எஸ்.ஏ.ராஜசேகர், பி.ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி நகரமன்றத் தலவர் ஜி.பாலகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர்கள் வெங்கடேசன், தேன்மொழி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Posts