விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி

விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016,

உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

தமிழக சட்டமன்றப் பேரவையில், கடந்த மாதம் 20-ம் தேதி, பேரவைவிதி 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு, அவரது நினைவை போற்றி சிறப்பிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கடந்த 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின்போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கடந்த 1970 முதல் 1980-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இத்தகைய சீர்மிகு நடவடிக்கைளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேலூரில் நேற்று அம்மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கமாநில தலைவர் திரு. எஸ்.ஏ.சின்னசாமி, கோவையில் உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபமும், விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்திலும், விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கியும், நாராயணசாமிக்கு மண்டம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், பாசனத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தினை விவசாயிகளுக்கு அர்ப்பணித்தது – மருதையாற்றின் குறுக்கே சுமார் 124 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நிர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியது என விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் செயலாற்றிவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.